69 மூடை ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல்

சிவகாசி அருகே 69 மூடை ரேஷன் அரிசியை லாரியுடன் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-02-13 19:52 GMT


சிவகாசி அருகே 69 மூடை ரேஷன் அரிசியை லாரியுடன் பறிமுதல் செய்தனர்.

வாகன சோதனை

விருதுநகர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், இன்ஸ்பெக்டர் ஆல்பின் பிரிஜிட் மேரி தலைமையில் சிவகாசி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிவகாசி-தென்காசி ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகில் ஒரு மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தலா 50 கிலோ கொண்ட 69 ரேஷன் அரிசி மூடைகள் இருந்தன. இந்த மினி லாரிக்கு பாதுகாப்பாக முன்னும், பின்னும் மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர்.

5 பேர் கைது

போலீசார் மினி லாரியுடன் 69 ரேஷன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்ததோடு லாரியில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அரிசி மூடைகள் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த சுபாஷ் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. மேலும் சுபாஷின் நண்பர் லாரியில் இருந்த சிவலார்குலத்தை சேர்ந்த கண்ணன் (வயது 34), லாரி டிரைவர் ஆலங்குளத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியன் (33), சுமை தூக்கும் தொழிலாளிகள் சங்கரன்கோவிலை சேர்ந்த கார்த்தி (22), ஆலங்குளத்தை சேர்ந்த மருதையா (28), ஆலங்குளத்தை சேர்ந்த நித்திய குமார் (40) ஆகிய 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து சுபாசை தவிர மற்ற 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். கடத்தல் லாரிக்கு பாதுகாப்பாக வந்த 2 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்