பொங்கல் பாதுகாப்பு பணியில் 686 போலீசார்
பொங்கல் பாதுகாப்பு பணியில் 686 போலீசார் ஈடுபடுகின்றனர் என்று திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
686 போலீசார்
திருப்பத்தூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் மேற்பார்வையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ் தலைமையில், 5 துணைபோலீஸ் சூப்பிரண்டுகள், 18 இன்ஸ்பெக்டர்கள், 138 சப்-இன்ஸ்பெக்டர்கள், 293 போலீசார், 60 ஆயுதப்படை போலீசார், 75 தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் மற்றும் 97 ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 686 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் பாதுகாப்பாக பொங்கல் விழாவினை கொண்டாடுவதோடு, யாருக்கும் எந்தவொரு இடைஞ்சலும் இல்லாத வகையில் பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டும்.
புகார் அளிக்கலாம்
சட்ட விதிகளை மீறி குற்ற செயல்களில் எவரேனும் ஈடுபட்டால் அந்த தகவலை சம்மந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கலாம்.
மேலும், 24 மணி நேரமும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக காவல் உதவி எண் 9442992526-ல் தகவல் தெரிவிக்கலாம். புகாரின் பேரில் உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.