கராத்தே மாஸ்டரிடம் ரூ.6.70 லட்சம் மோசடி

கராத்தே மாஸ்டரிடம் ரூ.6.70 லட்சம் மோசடி செய்யப்பட்டது.

Update: 2023-06-12 19:32 GMT

திருச்சி கே.கே. நகர் தங்கையா நகர் 7-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 35). கராத்தே மாஸ்டரான இவர் கராத்தே பயிற்சி பள்ளியும் நடத்தி வருகிறார். இந்தநிலையில் இவருக்கு சோமரசம்பேட்டை அருகே உள்ள வாசன் வேலி 15-வது கிராசை சேர்ந்த சுரேஷ் என்பவர் அறிமுகமானார். இதனிடையே அவர் சங்கரிடம் குறைந்த விலைக்கு வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி ஒரு இடத்தை காண்பித்து அவரிடமிருந்து ரூ.6 லட்சத்து 70 ஆயிரம் பெற்றுள்ளார். அந்த இடத்தை சங்கர் தனியாக சென்று விசாரித்த போது அந்த இடத்திற்கும் சுரேசுக்கும் சம்பந்தம் இல்லை என தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த சங்கர் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தை தர முடியாது என கூறி சங்கரை தி்ட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்