சரக்கு வேனில் கடத்திய 65 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

கீரனூர் அருகே சரக்கு வேனில் கடத்திய 65 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-08-07 18:02 GMT

சரக்கு வேன்

புதுக்கோட்டை மாவட்டம், உடையாளிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாயழகு மற்றும் போலீசார் கீரனூர் அருகே அண்டக்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை மறித்து போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் சரக்கு வேனில் 65 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

டிரைவர் கைது

இதையடுத்து போலீசார் புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியை சேர்ந்த டிரைவர் சையது அபுதாஹிரை (வயது 44) என்பவரை கைது செய்து, 586 பண்டல்கள் கொண்ட 65 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சையது அபுதாஹிர் சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்