65 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரி நடவடிக்கை

65 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு அதிகாரி நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2022-07-12 16:22 GMT


கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி தமிழ்செல்வன் தலைமையில் ஊழியர்கள் கோவை அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து கடை உரிமையாளர் உதயகுமார் (வயது 37) வீட்டில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலான 65 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து சூலூர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்