வீட்டில் பதுக்கிய 620 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Update: 2023-03-27 19:45 GMT

சேலம் பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த ஒருவரின் வீட்டில் ரேஷன் அரிசி கடத்தி வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சேலம் பறக்கும் படை தனி தாசில்தார் ராஜேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் குமார் ஆகியோர் நேற்று மாலை 4 மணிக்கு பள்ளப்பட்டி துரைசாமி நகரை சேர்ந்த சிவகாமி என்பவரின் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவருடைய வீட்டில் 620 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக பள்ளப்பட்டி நடுத்தெருவை சேர்ந்த திலீப்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்