மருத்துவ உதவியாளர்கள் உள்பட 61 பேர் தேர்வு

மருத்துவ உதவியாளர்கள் உள்பட 61 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

Update: 2023-01-28 18:45 GMT

ஊட்டி, 

தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் திட்டம் செயல்படுகிறது. இதில் பணிபுரிய டிரைவர்கள், மருத்துவ உதவியாளர்கள் பணிக்கான ஆள் சேர்ப்பு முகாம் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பின்புறம் உள்ள சுகாதாரத்துறை அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு தேர்வு வைக்கப்பட்டு, தகுதியான நபர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது,

நீலகிரியில் 39 டிரைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.15,235 வழங்கப்படும். நேற்று நேர்காணலக்கு வந்தவர்களிடம் சாலை விதிமுறைகள், வாகன பராமரிப்பு குறித்து கேள்வி கேட்கப்பட்டு அவர்களது கண் பார்வை திறன் பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு 10 நாட்கள் முறையான பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி இலவசமாக செய்து தரப்படும். இதேபோல் மருத்துவ உதவியாளராக பெண்கள் உள்பட 22 தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு மாதம் ஊதியமாக ரூ.15,430 வழங்கப்படும். இதில் தேர்வானவர்களுக்கு 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி, மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சி அளிக்கப்படும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்