பொதுத்துறை வங்கிகளில் 6,035 கிளார்க் பணியிடங்கள்
பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 6,035 கிளார்க் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தகுதித்தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் என இந்திய வங்கி பணியாளர் தேர்வு குழுமம் தெரிவித்துள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 6,035 கிளார்க் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தகுதித்தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் என இந்திய வங்கி பணியாளர் தேர்வு குழுமம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வங்கி பணியாளர் தேர்வுக்குழுமம் தெரிவித்துள்ளதாவது:-
பணியிடங்கள்
பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 6,035 கிளார்க் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்திய வங்கி குழுமத்தால் நடத்தப்படும் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். கல்வித்தகுதியானது பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் ஏதாவது ஒரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் காலியிடம் ஏற்பட்டுள்ள மாநிலத்தின் அலுவலக மொழியில் எழுத படிக்க பேச தெரிந்திருக்க வேண்டும்.
1-7-2022 தேதியின்படி 20 வயது முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆதிராவிட பழங்குடியினர் பிரிவினருக்கு 5 வருடங்களும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 3 வருடங்களும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை
இந்திய வங்கி பணியாளர் தேர்வு குழுமத்தால் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்து தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்து தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டத் தேர்வு செப்டம்பர் 2022. முதன்மை எழுத்து தேர்வு அக்டோபர் 2022-ல் நடைபெறும்.
தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சி திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய இடங்களில் எழுத்து தேர்வு நடைபெறும். எழுத்து தேர்வுக்கான கேள்விகள் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தியில் அமைந்திருக்கும்.
எழுத்து தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண் விவரம், முக்கிய தேதிகள் விவரம், இந்திய வங்கி தேர்வு குழுமத்தின் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யும் வங்கிகள் விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.850 ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.175 விண்ணப்பக்கட்டணமாகும். www.ibps.in என்ற இணையதளம் மூலமாக வருகிற 21-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு இந்திய வங்கி பணியாளர் தேர்வு குழுமம் தெரிவித்துள்ளது.