நெல்லையில் பாதுகாப்பு பணியில் 600 போலீசார்

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நெல்லையில் பாதுகாப்பு பணியில் 600 போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

Update: 2022-12-05 18:44 GMT

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நெல்லையில் பாதுகாப்பு பணியில் 600 போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

பாபர் மசூதி இடிப்பு தினம்

பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. நாடு முழுவதும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாதவாறு மக்கள் கூடும் இடங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். அதன்படி நேற்று நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜான், முத்தமிழ்செல்வன் (தனிப்பிரிவு) மற்றும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். பயணிகளின் உடைமைகள், ரெயில்நிலையம், வாகனங்கள் நிறுத்தும் இடம், பார்சல் அறை மற்றும் ரெயிலின் ஒவ்வொரு பெட்டிகளிலும் மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு சோதனை நடத்தினர். அதே போல் ரெயில்வே தண்டவாளத்திலும், வெடிபொருள் கண்டறியும் நவீன கருவி மூலம் சோதனை நடத்தினர்.

600 போலீசார்

மேலும் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் உத்தரவின் பேரில் நெல்லை மாநகர பகுதியில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை 6 மணி முதல் விடிய விடிய மாநகர பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தங்கும் விடுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. நெல்லை மாநகரத்தில் நேற்று போலீசார் கொட்டும் மழையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்