வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கத்துக்கு 60 ஆயிரத்து 392 பேர் விண்ணப்பம்; மாவட்ட பார்வையாளர் மகேஸ்வரன் தகவல்

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கத்துக்கு 60 ஆயிரத்து 392 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று மாவட்ட பார்வையாளர் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-04 16:51 GMT

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம், இறுதிவாக்காளர் பட்டியல் வெளியிடுதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன மேலாண்மை இயக்குனருமான மகேஸ்வரன் தலைமை தாங்கினார். கலெக்டர் விசாகன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மகேஸ்வரன் பேசுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பாக 34 ஆயிரத்து 899 விண்ணப்பங்கள் வந்தன. இந்த ஆண்டு 60 ஆயிரத்து 392 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் உரிய விசாரணைக்கு பின்னர் 58 ஆயிரத்து 592 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு உள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் உள்ளிட்ட பணிகளை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

இந்த கூட்டத்தில் உதவி கலெக்டர் பிரியங்கா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமர்நாத், ஆர்.டி.ஓ.க்கள் பிரேம்குமார், சிவக்குமார், தேர்தல் தாசில்தார் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்