தாயில்பட்டி,
தாயில்பட்டி பஸ் நிறுத்தத்தில் வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் சாக்கு பைகளுடன் வந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கலைஞர் காலனியை சேர்ந்த சின்னப்பராஜ் (வயது 50) என்பதும், அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட 60 கிலோ சோல்சா வெடிகள் மற்றும் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பட்டாசுகளை பறிமுதல் செய்ததுடன் சின்னப்பராஜை போலீசார் கைது செய்தனர்.