6 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலைமுயற்சி வழக்கில் தொடர்புடைய ஆறு வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-05 11:54 GMT

தூத்துக்குடியில் கொலை, கொலைமுயற்சி வழக்குகளில் தொடர்புடைய 6 வாலிபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கொலை வழக்கு

தூத்துக்குடி 3-வது மைல் பகுதியை சேரந்தவர் தவசிபெருமாள். இவருடைய மகன்களான 19 வயது வாலிபர், தினேஷ் என்ற பரமசிவம் (23), தூத்துக்குடி ஆசிரியர் காலனியை சேர்ந்த தனராஜ் மகன் அந்தோணிராஜ் (21), தூத்துக்குடி முத்தம்மாள் காலனியை சேர்ந்த முத்துராமன் மகன் ராபர்ட்ரகு (23), தூத்துக்குடி வள்ளிநாயகபுரத்தை சேர்ந்த 19 வயது வாலிபர் ஆகிய 5 பேரையும் கொலை வழக்கில் தென்பாகம் போலீசார் கைது செய்தனர். இதே போன்று தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த முருகன் மகன் வெங்கடேஷ் (20) என்பவரை சிப்காட் போலீசார் கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர். இந்த 6 வாலிபர்களும் தற்போது பாளையங்கோட்டை ஜெயலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

குண்டர் சட்டம்

இவர்கள் 6 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கற்குவேல், தினேஷ் என்ற பரமசிவம், அந்தோணிராஜ், ராபர்ட்ரகு, பரட்டை என்ற சுந்தரம் என்ற மாரிச்செல்வம், வெங்கடேஷ் ஆகிய 6 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.

நடப்பு ஆண்டில் இதுவரை போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட 12 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 37 பேர் உள்பட 193 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்