9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 6 ஆண்டுகள் சிறை

9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2023-02-08 19:39 GMT

9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை

தஞ்சை மாவட்டம் பேராவூரணி தாலுகா கீழமணக்காடு கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல்(வயது 63). கூலி தொழிலாளியான இவர், கடந்த 12-8-2020-ம் ஆண்டு 5-ம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

மேலும் இதனை யாரிடமும் சொல்லக்கூடாது என்று அந்த சிறுமியை மிரட்டியதோடு சத்தியம் செய்ய சொல்லி வற்புறுத்தி உள்ளார். ஆனால் அந்த சிறுமி அவரிடம் இருந்து தப்பி ஓடி வந்து பெற்றோரிடம் கூறி உள்ளார். அதன் பேரில் சிறுமியின் பெற்றோர் பேராவூரணி போலீசில் புகார் செய்தனர்.

6 ஆண்டுகள் சிறை தண்டனை

பின்னர் இந்த வழக்கு பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் உஷா, போலீஸ்காரர் திவ்யலட்சுமி ஆகியோர் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தஞ்சை போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி சுந்தர்ராஜன் விசாரித்து தங்கவேலுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அதில் ரூ.10 ஆயிரம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்