ஊரக திறனாய்வு தேர்வை 6 ஆயிரத்து 89 மாணவர்கள் எழுதினர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த ஊரக திறனாய்வு தேர்வை 6 ஆயிரத்து 89 மாணவர்கள் எழுதினர். தேர்வு மையங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2022-12-17 15:53 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த ஊரக திறனாய்வு தேர்வை 6 ஆயிரத்து 89 மாணவர்கள் எழுதினர். தேர்வு மையங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திருவண்ணாமலை

அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் மாணவர்களுக்கான தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு நடைபெற்றது. தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் வரை ஆண்டுக்கு ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

இத்தேர்வு திருவண்ணாமலை மாவட்டத்தில் 25 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்விற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 ஆயிரத்து 193 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இத்தேர்வில் 6 ஆயிரத்து 89 மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். 104 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.

இத்தேர்வை திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி தலைமையிலான மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் என 350 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

செய்யாறு

செய்யாறு கல்வி மாவட்டத்தில், 10 தேர்வு மையங்களில் நடந்த தேர்வை 2,511 மாணவர்கள் எழுதினர். செய்யாறு, வெம்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் செய்யாறு அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை செய்யாறு மாவட்ட கல்வி அலுவலர் ஏ.எல்லப்பன் நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது பள்ளி துணை ஆய்வாளர் ஸ்ரீபதி, தலைமை ஆசிரியர்கள் ஆயப்பன், ஜெயகாந்தன், தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்