6 பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

கரூரில் உள்ள 6 பாசன வாய்க்கால்களுக்கு ]தண்ணீர் வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Update: 2022-07-29 18:36 GMT

குறைதீர்க்கும் கூட்டம்

கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.கூட்டத்தில், குடகனாறு நீர் பங்கீடு தொடர்பான வல்லுநர் குழு அறிக்கை வெளியிட வேண்டும், நீராவிற்கு உரிமம் பெற விதித்திருக்கும் நிபந்தனைகளை தளர்த்த, எளிமைப்படுத்த வேண்டும், கோவையில் நடைபெறும் கொடிசியா கண்காட்சிக்கு வேளாண்மைத்துறை மூலம் விவசாயிகளை அழைத்துச் செல்ல வேண்டும்.

தண்ணீர் வேண்டும்

2020-ம் ஆண்டு துவரை பயிருக்கு இன்சூரன்ஸ் தொகை வேண்டும், வேளாண்மை பொறியியல் துறை மூலம் உழவு எந்திரம் வாடகைக்கு கிடைப்பது தாமதமாவது, மயானம் அருகே சாலை அமைத்து தர வேண்டும். ராஜேந்திரம் ஊராட்சியில் உள்ள பழைய சாலைகளை புதுப்பித்து தர வேண்டும்.கருங்காலப்பள்ளி கிராமத்தில் அரசு கால்நடை கிளை நிலையம் அமைத்திட வேண்டும், கட்டளை மேட்டு வாய்க்கால் 26-வது மதகில் செடி, கொடி வளர்ந்து முட்புதராக உள்ளதை சரி செய்ய வேண்டும், கரூரில் உள்ள 6 பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் பெற்று வழங்கிட வேண்டும், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை தடை செய்ய வேண்டும்.

தூர்வார வேண்டும்

காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும், கட்டளை -மருதாண்டான் வாய்க்கால் மற்றும் புலியூரில் இருந்து பிரியும் வாய்க்கால் தூர்வார வேண்டும், சின்னமநாயக்கன்பட்டி முதல் நடராஜபுரம் வரை வரும் வாய்க்கால் தூர்வார வேண்டும்கட்டளை மேட்டு வாய்க்கால் மாயனூர் முதல் தாயனூர் வரை 62 கிலோ மீட்டர் நவீனப்படுத்தும் பணி நிலை கோருதல், காவிரி குடிநீர் வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை விவசாயிகள் வழங்கினர். மேலும் இதுதவிர 83 விவசாயிகள் கோரிக்கை மனுக்களை நேரடியாக கலெக்டரிடம் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்