மூதாட்டியிடம் 6 பவுன் நகை பறிப்பு
மூதாட்டியிடம் 6 பவுன் நகை பறிப்பு நடந்தது.
காரைக்குடி,
கோட்டையூர் மடத்து தெருவை சேர்ந்தவர் சந்திரா (வயது 62).இவர் பஜனை மடவீதியில் ஆவின் பால் விற்பனையாகம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று மாலை 5 மணி அளவில் கடை முன்பு சேரில் அமர்ந்து இருந்தார்.அப்போது பின்புறமாக வந்த அடையாளம் தெரியாத நபர் சந்திரா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அருகில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிவிட்டார், சந்திராவின் புகாரின் பேரில் பள்ளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.