டிரைவர் வீட்டில் 6½ பவுன் நகை, பணம் திருட்டு

சரவணம்பட்டி பகுதியில் டிரைவர் வீட்டில் 6½ பவுன் நகை, பணம் திருட்டு போனது.

Update: 2022-11-01 18:45 GMT

சரவணம்பட்டி

கோவை சரவணம்பட்டி விநாயகபுரத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது62). டிரைவர். இவருடைய மனைவி லீலாவதி சின்னவேடம் பட்டியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவர்கள் நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது இரும்பு பீரோவை உடைத்து 4½ பவுன் தங்கச்சங்கிலி, 1 பவுன் கம்மல், ஜிமிக்கி, மோதிரம் உள்பட மொத்தம் 6½ பவுன் தங்க நகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்