தனியார் வங்கி ஊழியர் வீட்டில் 6 பவுன் நகை திருட்டு

தனியார் வங்கி ஊழியர் வீட்டில் 6 பவுன் நகையை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-12-24 19:26 GMT

தனியார் வங்கி ஊழியர் வீட்டில் 6 பவுன் நகையை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வங்கி ஊழியர்

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வருபவர் ராம்மோகன் (வயது 49). இவர் தனியார் வங்கி ஒன்றில் சரக மேலாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று காலை இவரது வீட்டில் இருந்த தங்கச்சங்கிலி, மோதிரம் உள்பட 6 பவுன் நகைகள் காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம ஆசாமிகள் இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டுள்ளனா்.

இந்த திருட்டு சம்பவம் குறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் நிலையத்தில் ராம்மோகன் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பேபி உமா வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்