அங்கன்வாடி பணியாளரிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு

அங்கன்வாடி பணியாளரிடம் 6 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-06-27 18:09 GMT

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள வடவம்பாடியை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மனைவி ரேவதி (வயது 33). இவர் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது ஸ்கூட்டரில் வடவம்பாடி சாலையில் சென்று கொண்டிருந்தார் அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 2 மர்மநபர்கள், ரேவதியை வழிமறித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 6½ பவுன் சங்கிலியை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரேவதி திருடன்... திருடன்... என சத்தம்போட்டார். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் ஓடி வந்தனர். அதற்குள் மர்மநபர்கள் சங்கிலியுடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.இதுகுறித்து ரேவதி கொடுத்த புகாரின்பேரில், லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்