காதலிப்பது போல் நடித்து பெண்ணின் போட்டோவை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டிய தனியார் பஸ் டிரைவர் சரமாரியாக தாக்கப்பட்டார். இது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

காதலிப்பது போல் நடித்து பெண்ணின் போட்டோவை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டிய தனியார் பஸ் டிரைவர் சரமாரியாக தாக்கப்பட்டார். இது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-26 16:29 GMT

பல்லடம்

காதலிப்பது போல் நடித்து பெண்ணின் போட்டோவை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டிய தனியார் பஸ் டிரைவர் சரமாரியாக தாக்கப்பட்டார். இது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பஸ் டிரைவர்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 27). தனியார் பஸ் டிரைவரான இவருக்கு திருமணமாகி விட்டது. இந்த நிலையில் இவருக்கும், கோவை மாவட்டம் சூலூர் தாலுகா சுல்தான்பேட்டை பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் ஈஸ்வரனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது அந்தப் பெண்ணின் குடும்பதினருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அந்த பெண்ணை சென்னையில் பணிபுரியும் ஒருவருக்கு கடந்த மாதம் திருமணம் செய்து வைத்தனர்.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்த பெண்ைண செல்போனில் தொடர்பு கொண்ட ஈஸ்வரன், தன்னுடன் வராவிட்டால் நாம் காதலித்து பழகிய போது ஒன்றாக இருந்த போட்டோக்களை சமூக வலைத் தளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார். மேலும் வீட்டில் உள்ள நகைகளை எடுத்துக்கொண்டு திருப்பூர் வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணும் செய்வது அறியாமல் நகைகளை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி ஈஸ்வரனை சந்தித்தார்.

போலீசில் புகார்

இதனிடையே அந்த பெண்ணை ஈஸ்வரன் கடத்திச் சென்று விட்டதாக பெண்ணின் உறவினர் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மீண்டும் வீடு திரும்பிய அந்த பெண் நடந்த விவரங்கள் அனைத்தையும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண்ணின் உறவினர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஈஸ்வரனை கடத்த திட்டமிட்டனர்.

இந்த நிலையில் நேற்று இரவு பல்லடம் அருகே மகாலட்சுமி நகரில் நண்பரை சந்திக்க ஈஸ்வரன் வந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த வெங்கடேஷ் தனது நண்பர்களுடன் சென்று ஈஸ்வரனை காரில் கடத்தியுள்ளார். காரில் வைத்து ஈஸ்வரனை சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்த ஈஸ்வரன் பல்லடம் போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

6 பேர் கைது

புகாரின் அடிப்படையில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வந்தனர். அப்போது ஈஸ்வரனை கடத்தி சென்ற கார் பல்லடம் நால்ரோடு வழியாக செல்வது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த காரை துரத்திச் சென்று காரில் இருந்த 6 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் அந்தப் பெண்ணின் உறவினர் மற்றும் கோவை செல்வபுரத்தை சேர்ந்த அருண்குமார், வதம்பச்சேரியை சேர்ந்த சுந்தர் சபரிநாதன், வினோத்குமார், இடையார்பாளையத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன், புளியமரத்துபாளையத்தை சேர்ந்த நிதிஷ் ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து 6 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்துள்ளனர். தாக்குதலில் காயம் அடைந்த ஈஸ்வரன் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்