சூதாடிய 6 பேர் கைது

Update: 2022-10-25 16:02 GMT


முத்தூர் அருகே தென்னங்கரைப்பாளையம் கிராம பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக வெள்ளகோவில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து வெள்ளகோவில் போலீசார் அப்பகுதிக்கு சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது தென்னங்கரைப்பாளையம் கிராம பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெற்று வருவது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த முத்தூர் பகுதியை சேர்ந்த சேனாதிபதி (வயது 55), ராமசாமி (57), ஓலப்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (27), விளக்கேத்தி பகுதியை சேர்ந்த குப்புசாமி (58), ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (28), உடுமலை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (44) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.7 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்