ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 பேர் கைது
ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்
மதுரை செல்லூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தத்தனேரி களத்துபொட்டல் வயல் பகுதி வழியாக சென்ற போது கும்பல் ஒன்று புதருக்குள் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தது. அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதில் தத்தனேரி, பாக்கியநாதபுரத்தை சேர்ந்த திருஞானசம்பந்தம்(வயது 20), ராஜ்குமார் (24), வெங்கடேஷ், வைரமணி, சோலைக்கனி, வேல்முருகன் என்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 6 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து அரிவாள், கத்தி, மிளகாய் பொடி பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.