பணம் வைத்து சூதாடிய 6 பேர் சிக்கினர்

பணம் வைத்து சூதாடிய 6 பேர் சிக்கினர்.

Update: 2022-10-10 18:45 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர், உடையார்பாளையம், மீன்சுருட்டி உள்ளிட்ட கிராமங்களில் முந்திரி தோப்பு உட்பட பல்வேறு இடங்களில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக புகார்கள் வந்ததையடுத்து, அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்பேரில், ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கல்யாணராமன் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது காந்திநகர் மாரியம்மன் கோவில் பகுதியில் பணம் வைத்து சூதாடிய சிலர், போலீசாரை பார்த்ததும் தப்பியோடினர். அவர்களை போலீசார் துரத்திச் சென்று பிடித்தனர். விசாரணையில் அவர்கள் காந்திநகரை சேர்ந்த பரமசிவம் மகன் பாலசுப்பிரமணியன்(வயது 25), ரங்கநாதன் மகன் வேல்முருகன்(28), அம்பேத்கர்நகரை சேர்ந்த கருத்தான் மகன் அயப்பன்(31), அரசன் மகன் பாஸ்கர் (44), வடக்கு தெருவை சேர்ந்த காசிநாதன் மகன் கலையரசன் (35), முருகேசன் மகன் சண்முகம் (31) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து, சீட்டு கட்டுகள், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்