தாமிரக்கம்பி திருடிய வழக்கில் 6 பேர் கைது

கூடங்குளம் அருகே தாமிரக்கம்பி திருடிய வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-13 20:29 GMT

கூடங்குளம்:

கூடங்குளம் 3, 4-வது உலை கட்டுமான பணிக்காக வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தாமிரக்கம்பிகளை மர்மநபர்கள் திருடிச் சென்றுவிட்டதாக கூடங்குளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் நேற்று அணுமின் நிலைய முன்பகுதியில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு வந்த வாகனத்தை சோதனை செய்ததில், டயர் பகுதியில் தாமிரக்கம்பிகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த பாலசுப்பிரமணியன் (வயது 55) கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த என்ஜினீயருடன் இணைந்து 5 பேர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊரல்வாய்மொழி காலனி தெருவை சேர்ந்த இசக்கியப்பன் மகன் ரமேஷ் (வயது 22), மாடசாமி மகன் அருண் (21), தேங்காய்பட்டினம் குமாரதாஸ் மகன் அஜய் (22), சூழ்ச்சிகுளம் மனோகர் மகன் சந்தோஷ் (22), கணேசன் மகன் சிவா (23), பட்டார்குளம் அன்பழகன் மகன் இசக்கியப்பன் (22) ஆகிய பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தாமிரக்கம்பிகள் மீட்கப்பட்டன. மேலும் இதில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்