பணம் கேட்டு மிரட்டிய 6 பேர் கைது

தனித்தனி சம்பவங்களில் பணம் கேட்டு மிரட்டிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-10-10 19:29 GMT

சிவகாசி, 

தனித்தனி சம்பவங்களில் பணம் கேட்டு மிரட்டிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாளை காட்டி மிரட்டல்

சிவகாசி மருதுபாண்டியர் மேட்டுதெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் சந்தோஷ் (வயது 21). இந்தநிலையில் சம்பவத்தன்று சிவகாசி-பள்ளப்பட்டி ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது அங்கு வந்த லிங்கபுரம் காலனியை சேர்ந்த முருகன் (31), சோனைக்குமார் (31) ஆகியோர் வாளை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.

இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். இதேபோல் சிவகாசி மீனம்பட்டியை சேர்ந்த பட்டாசு தொழிலாளி மணிகண்டன் (25) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் சிவகாசி-நாரணாபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கருப்பு என்கிற கருப்பசாமி (36), மூசா என்கிற முனீஸ்வரன் (21) ஆகியோர் வழிமறித்து அரிவாளை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

பணம் பறிப்பு

திருத்தங்கல் பழைய வெள்ளையாபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (25). இவர் செங்கமலநாச்சியார்புரம் பகுதியில் நடந்து வந்த போது அங்கு வந்த பாஸ்கரன் என்கிற மதுரை பாஸ்கரன் (46) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளார்.

இதுகுறித்து பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் மதுரை பாஸ்கரனை கைது செய்தனர். சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டியை சேர்ந்தவர் செல்வக்குமார் (28). இவர் சிவகாசி சிறுகுளம் கண்மாய் ரோட்டில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த பராசக்தி காலனியை சேர்ந்த குருசங்கர் காளி என்கிற குண்டுகாளி (37) என்பவர் செல்வக்குமாரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறிக்க முயன்றுள்ளார். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து குண்டுகாளியை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்