கரூர் மாவட்ட பகுதியில் பல்வேறு இடங்களில் மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, கரூர் மண்மங்கலத்தை சேர்ந்த கஜேந்திரன் (வயது 45), விஸ்வநாதபுரியை சேர்ந்த மகேந்திரன் (62), குளித்தலை அருகே உள்ள சின்னதேவன் பட்டியை சேர்ந்த மலர்கொடி (39), திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்த துரைசாமி (40), ராமநாதபுரத்தை சேர்ந்த ஜீவா (33), தவுட்டுப்பாளையத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் (34) ஆகிய 6 பேரும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 55 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.