பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
விக்கிரமங்கலம் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையிலான போலீசார் கோவிந்தபுத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள கருப்புசாமி கோவில் அருகே சிலர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இருப்பினும் போலீசார் 6 பேரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கோவிந்தபுத்தூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 41), பாலமுருகன் (27), சந்திரசேகர் (32), நாவலர் (60), வீரமணி (50), செல்வராஜ் (42) என்பது தெரிய வந்தது. பின்னர் அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து சீட்டுக்கட்டுகள் மற்றும் ரூ.13 ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.