பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-08-17 18:03 GMT

கரூர் டவுன் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெரியாண்டாங்கோவில் அமராவதி ஆற்று பகுதியில் அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (வயது 31), பூபதி (27), சூரியகுமார் (26), வஞ்சியம்மன் கோவில் தெருவில் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (38), ராஜசேகர் (42), பிரபு (39) ஆகிய 6 பேரும் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்