மது விற்ற முதியவர் உள்பட 6 பேர் கைது

வீரபாண்டியில் மது விற்ற முதியவர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-10-16 17:30 GMT

வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோகுலகண்ணன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின்பேரில் 5 பேர் கூட்டமாக நின்றனர். அவர்களை படித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் உப்புக்கோட்டையை சேர்ந்த தலக்குமணி (வயது 51), சின்னன் (54), கோட்டூரை சேர்ந்த கல்யாணித்தேவர் (70), சந்தோஷ் (19), வீரபாண்டியை சேர்ந்த மாணிக்கம் (40) ஆகியோர் என்பதும், மது விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 74 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோன்று வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்ற கூழையனூரை சேர்ந்த கருப்பையாமுத்து (37) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்