திருவள்ளூர் அருகே சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது
திருவள்ளூர் அருகே சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூர் அடுத்த விடையூர் ஏரி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சிலர் கும்பலாக கூடி சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அப்போது அங்கிருந்தவர்கள் போலீசார் வருவதை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். இதை தொடர்ந்து போலீசார் அங்கு சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட திருவள்ளூர் அடுத்த விடையூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (வயது 20), ஜானகி ராமன் (24), விக்னேஸ்வரன் (23), பாலாஜி (23), பார்த்திபன் (30) அசேன் பாஷா (36) ஆகிய 6 பேரை கைது செய்து இது சம்பந்தமாக விசாரித்து வருகிறார்கள்.