கூடலூர் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
கூடலூர் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
கூடலூர்
கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் மேற்பார்வையில் சப்- இன்ஸ்பெக்டர் கபில்தேவ் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கூடலூர் அருகே தொரப்பள்ளி பஸ் நிறுத்த பயணியர் நிழற்குடை கட்டிடத்தின் பின்புறம் சிலர் காசு வைத்து சூதாடுவது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் கூடலூர் மற்றும் தொரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த முகமது அலி (வயது 67), அப்துல் கபீர் (48), சித்திக் (50), ராமகிருஷ்ணன் (55), முகமது அலி (47), யூசுப் (50) ஆகிய 6 பேர் என தெரிய வந்தது. இது குறித்து கூடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் பிடிபட்ட 6 பேரை கைது செய்தனர். தொடர்ந்து ரூ.2,900 பறிமுதல் செய்யப்பட்டது.