நெல்லை தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில்கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 6 பேர் கைது
நெல்லை தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் கூட்டமாக கூடி கேக் வெட்டி நெல்லை டவுனை சேர்ந்த மணிகண்டன் (வயது 20) என்பவருக்கு பிறந்தநாள் கொண்டாடி உள்ளனர்.
இதுதொடர்பாக மானூர் மாதவக்குறிச்சியை சேர்ந்த லட்சுமணபெருமாள் (21), சுத்தமல்லியை சேர்ந்த கிருஷ்ணகுமார் (23), டவுனை சேர்ந்த கணபதி என்ற மணி (19), சேரன்மகாதேவியை சேர்ந்த ஜோஸ் (21) மற்றும் டவுனை சேர்ந்த மணிகண்டன் (21) உள்பட 6 பேர் மீது சந்திப்பு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.