ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் 6 பேர் விடுதலை - சரத்குமார் வரவேற்பு
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் 6 பேர் விடுதலைக்கு சரத்குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சென்னை,
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் சுப்ரீம் கோர்ட்டு விடுவித்துள்ளது.
30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டு, நன்னடத்தை, பரோல் கால செயல்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து ஏற்கனவே பேரறிவாளனை விடுதலை செய்ததுபோல, சுபரீம் கோர்ட்டுக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசனத்தின் 142- வது பிரிவின் கீழ் இவர்கள் 6 பேரையும் விடுவித்திருப்பது, பேரறிவாளன் விடுதலையின் போதே எதிர்பார்த்த ஒன்று தான்.
கருணை மற்றும் மனிதாபிமான அடிப்படையில் ஏற்கனவே எதிர்பார்த்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கியிருப்பதை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மனதார ஏற்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.