வாலிபருக்கு 6 மாதம் சிறை

திருட்டு வழக்கில் வாலிபருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

Update: 2023-04-26 18:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து என்பவரது மகன் சண்முகம் (வயது 34). இவர் மீது கடந்த ஆண்டு திருட்டு குற்றத்திற்காக நெகமம் போலீஸ் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை பொள்ளாச்சி ஜே.எம்.- 2 கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு 6 மாத சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதமாக விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட அதிகாரி மற்றும் சாட்சிகளை கோர்ட்டில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய போலீசார் ஆகியோரை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்