6 அரசு பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக தேர்வு

கோவை, நீலகிரி மாவட்டங்களில் 6 அரசு பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

Update: 2022-12-01 18:45 GMT


கோவை, நீலகிரி மாவட்டங்களில் 6 அரசு பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சிறந்த பள்ளிகள் தேர்வு

2020-21-ம் ஆண்டுக்கான சிறந்த பள்ளிகளின் பட்டியலை தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. அதன்படி38 மாவட் டங்களில் 114 பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

இதில் கோவை மாவட்டத்தில், கோவை பாப்பநாயக்கன்பாளை யம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, பேரூர் ராமசெட்டிப்பாளை யம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, எஸ்.எஸ்.குளம் ஷாஜ கான் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய 3 பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

நீலகிரி மாவட்டம்

நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி கேரடாமட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி., குன்னூர் காந்திபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி, ஊட்டி குந்தா அரசு தொடக்கப்பள்ளி அலுவலர் முகாம் ஆகிய 3 பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

சிறந்த பள்ளிகளுக்கு பரிசு மற்றும் விருது வழங்கும் விழா நாளை (சனிக்கிழமை) சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக ஆடிட்டோரியத்தில் நடைபெறுகிறது.

இது குறித்து கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பூபதி கூறுகையில், பள்ளியின் உள்கட்டமைப்பு வசதி, குழந்தைகளின் கல்வி இணைச்செயல்பாடுகளை வளர்ப்பதில் முக்கியத்துவம் தருதல், குழந்தைகளின் வாசித்தல், எழுதுதல், கணிதத்திறன், கற்றல் அடைவுத்திறன், பள்ளியில் கற்றல் சிறப்பாக நடைபெறு தல், கழிப்பறை, கற்பித்தலில் குறைந்தபட்சம் 5 புதிய உத்திகளை பயன்படுத்துதல், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முயற்சித்தல், பன்முகத்திறன் வெளிப்பட வாய்ப்பு அளித்தல் உள்ளிட்ட தரக் குறியீட்டின் அடிப்படையில் சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்படுகிறது. இதில் கோவை மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 3 சிறந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை வாழ்த்துறேன் என்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது போல் மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி புனிதா அந்தோணியம்மாளும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தலைமை ஆசிரியர்கள் பேட்டி

சிறந்த பள்ளியாக தேர்வு பெற்ற பாப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை உமா கூறியதாவது:-

எங்கள் பள்ளியில் 235-ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை யை 265 ஆக உயர்த்தி உள்ளோம். இங்கு கல்வி அதிகாரியின் குழந்தைகள் 2 பேர் படிக்கிறார்கள். நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கற்பித்தல், கற்றல், பாட இணை செயல்பாடுகளில் முழுமையான ஈடுபடுதல் உள்ளிட்ட காரணங்களால் எங்களது பள்ளி தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

பேரூர் ராமசசெட்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை கவுசல்யா கூறுகையில், கற்பித்தல் திறனை மேம்படுத்தியது, பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்தது உள்ளிட்ட பல காரணங்களால் எங்களது பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றார்.

மாணவர் எண்ணிக்கை

எஸ்.எஸ்.குளம் ஷாஜகான் நகர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன் கூறுகையில், எங்கள் பள்ளியின் மாணவர் சேர்க்கையை 338-ல் இருந்து 678 ஆக உயர்த்தி உள்ளோம். தூய்மையான பள்ளி வளாகம், பள்ளி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியது உள்ளிட்ட காரணங்களால் எங்கள் பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றார்.

மேலும் செய்திகள்