பெருஞ்சாணி அணைப்பகுதியில் 59 மி.மீ மழை. பதிவு

குமரி மாவட்டத்தில் கோடை மழை பெய்து வருகிறது. பெருஞ்சாணி அணைப்பகுதியில் 59 மி.மீ. மழை பதிவானது.

Update: 2023-04-27 18:45 GMT

நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் கோடை மழை பெய்து வருகிறது. பெருஞ்சாணி அணைப்பகுதியில் 59 மி.மீ. மழை பதிவானது.

கோடை மழை

குமரி மாவட்டத்தில் கோடை வெயில் கடுமையாக இருந்து வருகிறது. இருப்பினும் கடந்த சில நாட்களாக கோடை வெயிலுக்கு இடையே மழையும் பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதேபோல் நேற்று மதியமும் மாவட்டத்தில் மிதமான மழை பெய்தது. குறிப்பாக குலசேகரம், பெருஞ்சாணி, பேச்சிப்பாறை, பொன்மனை, திருவட்டார் போன்ற பகுதியில் பரவலாக மழை பெய்தது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக பெருஞ்சாணி அணைப்பகுதியில் 59 மில்லி மீட்டர் மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-

குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறப்பு

பேச்சிப்பாறை அணை- 28, புத்தன் அணை- 57.8, சிற்றார்-1 அணை-30.2, சிற்றார்-2 அணை- 6.4, மாம்பழத்துறையாறு அணை- 25, முக்கடல் அணை- 21.2, பூதப்பாண்டி- 30.4, களியல்- 12, கன்னிமார்- 18.2, குழித்துறை- 20, நாகர்கோவில்- 4, சுருளக்கோடு- 55.4, தக்கலை- 30.3, இரணியல்- 22, பாலமோர்- 24.2, திற்பரப்பு- 7.4, ஆரல்வாய்மொழி- 3, கோழிப்போர்விளை- 4.7, அடையாமடை- 3, குருந்தன்கோடு- 36, ஆனைக்கிடங்கு- 23 என்ற அளவில் மழை பதிவானது.

மழையையொட்டி பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 320 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 242 கன அடி தண்ணீரும், சிற்றார்-1 அணைக்கு வினாடிக்கு 20 கன அடி தண்ணீரும், சிற்றார்-2 அணைக்கு வினாடிக்கு 30 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணையில் இருந்து மட்டும் வினாடிக்கு 51 கன அடி தண்ணீர் நாகர்கோவில் நகர மக்களின் குடிநீர் தேவைக்காக திறந்து விடப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்