குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 58 பேர் கைது
மேல்மலையனூர் தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 58 பேர் கைது
மேல்மலையனூர்
மேல்மலையனூர் அருகே செவலபுரை கிராமத்தில் 72 வீடுகள் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. வீடுகளை இழந்தவர்கள் தற்காலிகமாக அங்குள்ள அங்கன்வாடி மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாற்று இடம் தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். நேற்று முன்னாள் எம்.எல்.ஏ. விக்கிரவாண்டி ராமமூர்த்தி, வட்ட செயலாளர் முருகன் ஆகியோர் தலைமையில் கட்சியினர் மற்றும் அப்பகுதி மக்கள் மேல்மலையனூர் தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தினர். அப்போது தாலுகா அலுவலகத்துக்குள் நுழைய முயன்ற ராமமூர்த்தி உள்ளிட்ட 58 பேரை போலீசார் கைது செய்து பின்னர் மாலையில் அனைவரையும் விடுவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.