567 பயனாளிகளுக்கு ரூ.3½ கோடியில் நலத்திட்ட உதவிகள்-அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 567 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 63 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

Update: 2023-04-28 18:04 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 567 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 63 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 567 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 63 லட்சம் மதிப்பில் தாலிக்கு தங்கம், திருமண நிதி உதவி, இலவச வீட்டுமனை பட்டா, இலவச தையல் இயந்திரம், மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள், இயற்கை மரணம் நிவாரணம், ஆசிரியர்களுக்கான ஊக்கத் தொகை உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அவர் பேசியதாவது:-

சிறப்பு திட்டங்கள்

தமிழக முதல்-அமைச்சர், நரிக்குறவர்கள், இருளர், மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை தரம் மேம்பட பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெண் கல்வியை மேம்படுத்த புதுமைப் பெண் திட்டத்தை கொண்டு வந்து உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கி வருகின்றார். வேலைக்கு செல்லும் தாய்மார்களால் தங்கள் பிள்ளைகளுக்கு காலை உணவு தயாரிப்பதில் சிரமம் இருப்பதை உணர்ந்து காலை உணவு திட்டத்தினை செயல்படுத்தியுள்ளதால் குழந்தைகள் நன்றாக சாப்பிட்டு கல்வி பயின்று வருகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் ஆற்காடு தொகுதி எம்.எல்.ஏ. ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முரளி, வருவாய் கோட்டாட்சியர் வினோத்குமார், ஒன்றியக் குழு தலைவர்கள் சே.வெங்கட்ரமணன், புவனேஸ்வரி சத்தியநாதன், அனிதா குப்புசாமி, சீ.அசோக், பி.வடிவேலு, நிர்மலா சவுந்தர், நகரமன்ற தலைவர்கள் சுஜாதா வினோத், ஹரிணி தில்லை, முகமது அமீன், தமிழ்ச்செல்வி அசோகன், பேரூராட்சி தலைவர் சங்கீதா மகேஷ், ஒன்றியக் குழு துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் செல்வம், பவித்ரா சசிகுமார் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்