கடந்த ஆகஸ்ட் மாதம் மெட்ரோ ரெயிலில் 56.66 லட்சம் பேர் பயணம் - மெட்ரோ நிர்வாகம் தகவல்
சென்னை மெட்ரோ ரெயிலில் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சென்னை மெட்ரோ ரெயிலில் 56.66 லட்சம் பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கடந்த 29-ந்தேதி 2 லட்சத்து 20 ஆயிரத்து 898 பயணிகள் ஒரே நாளில் பயணம் செய்துள்ளதாகவும், சென்னை மெட்ரோ ரெயிலில் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கம் முதலே மெட்ரோ ரெயில் சேவையை பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருவதாகவும், கடந்த ஜனவரி மாதம் முதல் 5 மாதத்தில் மொத்தம் 1 கோடியே 95 லட்சத்து 7 ஆயிரத்து 837 பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.