விழுப்புரம் மாவட்டத்தில்மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் 56 பேர் இடமாற்றம்
விழுப்புரம் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் 56 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வரும் போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலைய ஏட்டுகள் நாகராஜன், வினோத், ஜெயப்பிரதா, வசந்தி, திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலைய ஏட்டுகள் பிரதீப்குமார், ஏழுமலை, செஞ்சி மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலைய ஏட்டுகள் கோவிந்தராசு, இளங்கோவன், கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலைய ஏட்டுகள் சுந்தரமூர்த்தி, கந்தன் உள்ளிட்ட 56 போலீசார், மாவட்டத்திற்குள் வெவ்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பிறப்பித்துள்ளார்.