விருதுநகரில் 56 மூடை ரேஷன் அரிசி பதுக்கல்

விருதுநகரில் 56 மூடை ரேஷன் அரிசியை பதுக்கிய அரிசி ஆலை அதிபரை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-02 19:00 GMT

விருதுநகர்,

விருதுநகரில் 56 மூடை ரேஷன் அரிசியை பதுக்கிய அரிசி ஆலை அதிபரை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

ரேஷன் அரிசி பதுக்கல்

விருதுநகர் மாவட்ட உணவுப்பொருட்கள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு விருதுநகர் பாண்டியன் நகர் பகுதியில் உள்ள ஒரு அரிசி ஆலையில் ரேஷன் அரிசி மூடைகள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் வந்தது. அதன்பேரில் அவர்கள் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு தலா 50 கிலோ கொண்ட 56 மூடைகளில் 2,800 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். இதனைத்தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் அப்பகுதியிலுள்ள ஆர்.வி.ஆர். நகரை சேர்ந்த அரிசிஆலை அதிபர் முனியசாமி (வயது 62) என்பவர் தனது அரிசி ஆலையில் ரேஷன் அரிசி மூடைகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

அதன்பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அவரை கைது செய்து காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தசம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்