இலங்கைக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த 550 கிலோ கடல் அட்டை பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக ராமேசுவரத்தில் ஆள் இல்லாத குடிசை வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 550 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-05-20 18:45 GMT

ராமேசுவரம்

இலங்கைக்கு கடத்துவதற்காக ராமேசுவரத்தில் ஆள் இல்லாத குடிசை வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 550 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கடல் அட்டைகள்

ராமேசுவரம் புலித்தேவன் நகர் பகுதியில் உள்ள ஆள் இல்லாத வீடு ஒன்றில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கடலோரப் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதை தொடர்ந்து ராமேசுவரம் கடலோர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில் கடலோர போலீசார் அங்கு விரைந்து சென்றனர். புலித்தேவன் நகரில் உள்ள ஆளில்லாத குடிசை வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் டப்பாக்களில் இருந்த சுமார் 550 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர்.

விசாரணை

இதைதொடர்ந்து இது யாருக்கு சொந்தமான வீடு, இங்கு பதுக்கி வைத்த கடத்தல் காரர்கள் யார்? என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட இந்த கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக பிடித்து கொண்டுவரப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. தொடர்ந்து இந்த கடல் அட்டைகளை கடலோர போலீசார் மண்டபத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்