536 கால்நடைகளுக்கு நோய்தடுப்பு-குடற்புழு நீக்க சிகிச்சை

குழந்தைகள் உதவி மையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன.

Update: 2022-11-18 19:20 GMT

ஜோலார்பேட்டை,

ஏலகிரி மலையில் நடந்த கால்நடை மருத்துவ முகாமில் ஒரே நேரத்தில் 536 கால்நடைகளுக்கு பரிசோதனை செய்து நோய் தடுப்பு மற்றும் குடற்புழு நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஒரே ஒரு கால்நடை மருத்துவமனை

ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை, 14 கிராமங்களை உள்ளடக்கிய தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. ஏலகிரி மலையில் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் முக்கிய தொழிலாக விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் ஆடு வளர்ப்பு, கறவை மாடுகள் வளர்ப்பு, கோழி வளர்ப்பு, போன்ற கால்நடைகளை வளர்த்தல் பராமரிப்பு செய்து வருகின்றனர்.

ஆனால் ஏலகிரி மலையில் உள்ள 14 கிராமத்திற்கும் பழத்தோட்டம் பகுதியில் உள்ள ஒரே ஒரு கால்நடை மருத்துவமனை மட்டுமே உள்ளது.இந்த நிலையில் ஏலகிரி மலையில் உள்ள ராயனேரி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

பரிசோதனை செய்து சிகிச்சை

முகாமில் வேலூர் மண்டல இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன், திருப்பத்தூர் உதவி இயக்குனர் முரளி முன்னிலையில் ஏலகிரி மலை உதவி கால்நடை மருத்துவர்கள் கி. விஸ்வநாதன் மற்றும் அருணாச்சலரமணன், ஆய்வாளர் கி.பாஸ்கர் குழுவினர் 90 மாடுகள், 140 வெள்ளாடுகள், 96 செம்மறி ஆடுகள், 200 கோழி என 536 கால்நடைகளுக்கும் 7 வளர்ப்பு நாய்களுக்கும் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். மேலும் தடுப்பூசி போடுதல், கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்தல், சினை ஊசி போடுதல், மலட்டு நீக்க சிகிச்சை, சினை பரிசோதனை செய்தல், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி போடுதல் உள்பட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

இதில் சிறந்த 3 கிடேரி கன்றுகளுக்கு மூன்று பால் கேன்கள் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் கால்நடைகளுக்கு வழங்குவதற்காக 50 பேருக்கு பாக்கெட்டுகள் தாது உப்புகள் வழங்கப்பட்டன. இதனையொட்டி பேரணியும் நடத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்