மது விற்ற 53 பேர் சிக்கினர்

நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 53 பேர் சிக்கினர்.

Update: 2022-07-03 18:54 GMT

நெல்லை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா, மது பாட்டில்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவிட்டு உள்ளார். அதன்பேரில் போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்டத்தில் கடந்த மாதம் 25-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை போலீசார் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக மது விற்றதாக 53 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 426 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்