தமிழகத்தில் இன்று 525 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் சில வாரங்களாக கொரோனா குறையத்தொடங்கியுள்ளது.

Update: 2022-08-28 14:58 GMT

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா குறையத்தொடங்கியுள்ளது. கடந்த சில தினங்களாக தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது மக்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

தமிழகத்தில் மேலும் 525 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 67 ஆயிரத்து 160ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை596 ஆக உள்ளது.

இதுவரை 35 லட்சத்து 23 ஆயிரத்து 858 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால்உயிரிழப்பு இல்லை.தமிழகம் முழுவதும் 5,268 பேர் சிகிச்சையில் உள்ளனர்.சென்னையில் 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்