தமிழ்நாட்டில் இன்று மேலும் 521 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 521 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதன்படி தமிழகத்தில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 521 ஆக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இன்று ஒரே நாளில் 521 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண்கள் 257 பேர், பெண்கள் 264 பேர் அடங்குவர் மற்றும் 4 வெளிநாட்டு பயணிகளுக்கு தொற்று கண்டறியப்பட்டது.
சென்னையில் அதிகபட்சமாக 140 பேர் பாதிப்புக்கு உள்ளாகினர். அதற்கு அடுத்தபடியாக கோவையில் 45 பேரும்.கன்னியாகுமரியில் 44 பேரும் பாதிக்கப்பட்டனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 386 பேர் குணம் அடைந்தனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 330 ஆக உள்ளது. இதேபோல் தமிழகத்தில் இன்று உயிரிழப்பு எதுவும் இல்லை" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.