369 பயனாளிகளுக்கு ரூ.52 ¾ லட்சம் நிதியுதவி

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 369 பயனாளிகளுக்கு ரூ.52 ¾ லட்சம் நிதியுதவியை கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

Update: 2023-07-05 18:45 GMT

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 369 பயனாளிகளுக்கு ரூ.52 ¾ லட்சம் நிதியுதவியை கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

ரூ.52 லட்சத்து 83 ஆயிரம்..

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் நுண் தொழில் நிறுவன நிதி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கி வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் ரூ.52 லட்சத்து 83 ஆயிரம் நுண்தொழில் நிறுவன நிதியினை 39 ஊராட்சியை சேர்ந்த 369 பயனாளிகளுக்கு வழங்கினார்.

அப்போது மாவட்ட கலெக்டர் நிதி உதவி பெற்ற மகளிர் அதனை சிறப்பான முறையில் பயன்படுத்தி பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என்றார்.

ஆய்வு கூட்டம்

முன்னதாக வாழ்ந்து காட்டுவோம் திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தும், செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்தும், திட்டத்தினால் பயன்பெற்ற பெண்கள் பெற்ற வளர்ச்சி குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

இதில் ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா, வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயல் அலுவலர் வேல்முருகன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மணிவண்ணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) நரேந்திரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முத்துசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாள வினாயக அமல்ராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயபாலன், மாவட்ட தாட்கோ மேலாளர் சுகந்தி மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்