பொதுத்தேர்வு எழுதாத 50 ஆயிரம் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
பொதுத்தேர்வு எழுதாத 50 ஆயிரம் மாணவர்கள் விவரங்களை கண்டறிய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி நடப்பு ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 13-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந்தேதி வரை நடைபெறுகிறது.
முதல் நாளன்று மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற்ற நிலையில், மொழித் தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்பது தெரியவந்துள்ளது. தேர்வு எழுத வராத மாணவர்கள் குறித்து விசாரிக்கப் பள்ளிகளுக்கு அறிவுறுத்தபட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதாத 50,000 மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது
மார்ச் 24, ஏப்.10-ல் சிறப்பு பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த பள்ளிக்கல்வித்துறையின் மாநில திட்ட இயக்குனர் சுற்றறிக்கை விடுத்துள்ளார்.
பொதுத்தேர்வு எழுதாத 50 ஆயிரம் மாணவர்கள் விவரங்களை கண்டறிய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.