மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும்

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று கறம்பக்குடி ஒன்றிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-08-08 18:46 GMT

கறம்பக்குடி:

கறம்பக்குடியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை சங்கத்தின் ஒன்றிய மாநாடு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு லெனின் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் மாலதி பிரபாகரன் கொடியேற்றினார். மாவட்ட தலைவர் சரவணன் தொடக்க உரையாற்றினார். மாநாட்டில் ஒன்றிய தலைவராக மாலதி, செயலாளராக மார்கோ, பொருளாளராக லெனின் உள்பட 22 ஒன்றிய குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் 100 நாள் வேலையில் உள்ள பிரச்சினைகளை கலைவது, குடும்ப அட்டைகளை ஏ.ஏ.ஒய் அட்டைகளாக மாற்றுவது, நிறுத்தப்பட்ட உதவித்தொகையை மீண்டும் வழங்க தாசில்தாரிடம் மனு கொடுத்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் ஊனமுற்றோருக்கு ரூ.3 ஆயிரமும், கடும் ஊனமுற்றோருக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும். அனைவருக்கும் மாற்றுத்திறனாளிகள் துறை மூலமே உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பொதுச்செயலாளர் நம்புராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மார்கோஸ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்