தேவூர் பகுதியில் சூறைக்காற்றால் 5 ஆயிரம் வாழைகள் சேதம்

தேவூர் பகுதியில் கனமழையுடன் சூறைக்காற்று வீசியது. இதனால் 5 ஆயிரம் வாழைகள் சேதம் அடைந்தன.

Update: 2023-03-31 20:53 GMT

தேவூர்:

வாழை சாகுபடி

தேவூர் அருகே கோனேரிபட்டி அக்ரஹாரம், தோப்புகாடு, பூமணியூர், பூச்சமரத்துக்காடு, அரசிராமணி வாய்க்கால் கரை, காவேரி பட்டி, சென்றாயனூர், பெரமாச்சிபாளையம், பாலிருச்சம்பாளையம், காணியாளம்பட்டி, சீரங்ககவுண்டம்பாளையம், காணியாளம்பட்டி, புதுப்பாளையம், அம்மாபாளையம், கோணக்கழுத்தாணூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கதளி, நேந்திரம், தேன் வாழை, மொந்தன் வாழை, உள்ளிட்ட வாழை சாகுபடி செய்துள்ளனர்.

அவ்வாறு சாகுபடி செய்யப்பட்டு 10 மாதங்கள் முடிந்துள்ள வயல்களில் தற்போது வாழை காய்கள் காய்த்து வருகிறது.

5 ஆயிரம் வாழைகள்

இந்நிலையில் தேவூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் பெய்த கனத்த மழையினால் கோனேரி பட்டி அக்ரஹாரம் பூச்சமரத்துகாடு பகுதியை சேர்ந்த பெரியசாமி தோட்டத்தில் 1,200 தேன் வாழைகள், தோப்புக்காடு குணசேகரன் தோட்டத்தில் 600 கதளி வாழைகள், தண்ணிதாசனூர் சுப்பிரமணி தோட்டத்தில் 900 கதளி வாழைகள், அரசிராமணி மூலப்பாதை பகுதி துரைசாமி தோட்டத்தில் 50 கதளி வாழைகள், காவேரிபட்டி ஊராட்சி முனியப்பன் தோட்டத்தில் 100 வாழைகள் உட்பட தேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் அடியோடு சாய்ந்து சேதமானது,

இதுகுறித்து சங்ககிரி தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் சரஸ்வதி தலைமையில் தோட்டக்கலை துறை அலுவலர் ராஜா உள்ளிட்ட தோட்டக்கலைத்துறையினர் மற்றும் தேவூர் வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வி, கிராம நிர்வாக அலுவலர்கள் அருள்முருகன், கருப்பண்ணன், செந்தில்குமார், பிரதீப்குமார் ஆகியோர் சேதமான வாழைகளை பார்வையிட்டு கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்